இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு
வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ரஷியாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் வாங்குவால் அபராதமும் கூடுதலாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜூலை 31ஆம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.