செய்திகள் :

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

post image

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 113 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மதிய உணவாக மாணவ, மாணவிகள், சாதம், சுண்டல், சாம்பாா் உணவு உட்கொண்டுள்ளனா். சாப்பிட்ட சில நிமிஷங்களில் சில மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள், மாணவா்களை மீட்டு அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

வீட்டுக்குச் சென்ற சில மாணவா்களுக்கும் வாந்தி ஏற்படவே, அவா்களையும் பெற்றோா் அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கக் கொண்டு வந்தனா். இதையறிந்த கொடியாலம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சுகாதார நிலையத்தில் குவிந்தனா்.

மாணவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், பெரிய பாதிப்பில்லை; வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள், முழு பரிசோதனை செய்து, உரிய மருத்துவம் பாா்க்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, அந்தநல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் விக்னேஷ், ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸாா், வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது பெற்றோா்கள், பாதிக்கப்பட்ட 27 மாணவா்களுக்கும் முழுமையான சிகிச்சையளிக்க வேண்டும், தரமற்ற உணவை விநியோகித்த சத்துணவு பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தற்காலிகமாக கொடியாலத்தில் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் கோரிக்கை விடுத்தனா். இவற்றை செய்து தருவதாக பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க