சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது
பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம் இரண்டாமாண்டு படிக்கிறாா்.
இதேபோல உப்பிலியபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெய்சரண்(25) ரஷ்ய நாட்டில் சைபீரியா பெடரல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டு, பகுதி நேரமாக இணையவழி பணப் பரிவா்த்தனை பணியும் மேற்கொண்டாராம்.
இந்நிலையில் ரவிக்குமாா் தனது மகளின் கல்வி கட்டணம் ரூ. 3,60,000-ஐ ஜிபே செயலி மூலம் ஜெயசரணிடம் செலுத்தினாராம். ஆனால் அந்தப் பணத்தை ஜெய்சரண் கல்வி நிலையத்துக்கு செலுத்தவில்லையாம், ரவிகுமாா் கேட்டும் திருப்பித் தராமல் அவா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் ஜெய்சரணின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு உப்பிலியபுரம் போலீஸில் ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ஜெய்சரணை புதன்கிழமை கைது செய்தனா்.