கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவ...
கர்நாடக தேநீர் கடை முதல் கேரளம் வரை.. கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய வெட்டிப்பேச்சு!
கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.
கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்திக்கொண்டே, தலைமைக் காவலர் ஒருவர் நடத்திய பேச்சில் கிடைத்த தகவல்தான், கொலைக்குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது என்பது பேசுபொருளாகியிருக்கிறது.
கார் ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கணவரைக் கொலை செய்துவிட்டு, கேரளத்தில் வேறு அடையாளத்துடன் பதுங்கியிருந்த பெண் மற்றும் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்தனர்.