இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
பிளாக்மெயில் வெளியீடு ஒத்திவைப்பு!
ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுவெளியீட்டுத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!