புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
Kingdom: ``அனிருத்தை கடத்தி கொண்டு போகணும்; சூர்யா சாருக்கு நன்றி!" - சென்னையில் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்காக ப்ரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் பறந்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, 'ஜெர்சி' பட இயக்குநர் கெளதம் டின்னனுரி இயக்கியிருக்கிறார். படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய விஜய் தேவரகொண்டா, "தமிழ் மக்களுக்கு வணக்கம். உங்களுடைய அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்படத்தின் இயக்குநர் கெளதமின் 'ஜெர்சி' திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 'கிங்டம்' படத்தின் கதையை அவர் சொன்னதும், இதனை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பண்ண வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
கிளாசிக் ஆக்ஷன் டிராமா
இப்படத்தின் கதைக்களம் ஆந்திரா, சென்னை மற்றும் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில் நடப்பதாக அமைத்திருக்கிறோம்.
ரஜினி சார் திரைப்படங்களில் வருவதைப் போல, இந்தத் திரைப்படமும் ஒரு கிளாசிக் ஆக்ஷன் டிராமா கதையைக் கொண்டது. ஹைதராபாத்துக்குப் பிறகு 'கிங்டம்' படத்தின் விளம்பரப் பணிகளுக்காக நான் இங்குதான் வந்திருக்கிறேன்.
நான் இந்த மேடையில் இரண்டு நபர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு பெரிய நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். அவர்தான் 'கிங்டம்' படத்தின் டீசரை முதலில் தமிழில் வெளியிட்டார்.
சூர்யா அண்ணா இப்படத்தின் டீசருக்கு டப் செய்ய வேண்டும் என இயக்குநர் கெளதம் விரும்பினார். எனக்கு இதுபோன்ற வேலைகளுக்காக மற்றவர்களிடம் பேசுவதை நான் விரும்பமாட்டேன்.
பிறகு சூர்யா அண்ணாவுக்கு ஃபோன் செய்து, 'அண்ணா, எனக்கு ஒரு உதவி மட்டும் தேவைப்படுகிறது. தயவு செய்து அதற்கு 'நோ' சொல்லாதீர்கள்,' என்றேன். அவரும், 'இல்லை, இல்லை, நீங்கள் என்ன விஷயம் என்பதைச் சொல்லுங்கள்,' என்றார்.
பிறகு நான், 'இப்படத்தை தமிழிலும் நான் வெளியிட விரும்புகிறேன். என்னுடைய இயக்குநர் உங்களுடைய குரல் இந்த டீசருக்கு வேண்டும் என விரும்புகிறார்.
அதைச் செய்து தர முடியுமா?' என்றேன். 'நிச்சயமாக, நான் செய்கிறேன்,' என வந்து பேசிக் கொடுத்த சூர்யா அண்ணாவுக்கு நன்றிகள்! எனக்காக இதை நீங்கள் செய்ததில் மகிழ்ச்சி.
அனிருத் படத்திற்கு ஒரு புதிய உயிர் கொடுத்திருக்கிறார்," என்றவர், "என்னுடைய 'குஷி' திரைப்படத்தையும் இங்கு வெற்றியடையச் செய்த மக்களுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது, அனிருத்தை கடத்திக் கொண்டு செல்ல வேண்டும் எனப் பேசியிருந்தேன். அதற்கான தருணம் அமைந்து, நாங்கள் இருவரும் ஒன்றாகப் பணிகளை கவனித்திருக்கிறோம்.
நான் இங்கு சென்னைக்கு வந்து அவருடைய ஸ்டுடியோவில் ஜாலியாக இருந்தேன். இப்போது அவரை இன்னும் முழுமையாக என்னுடன் கடத்திச் செல்ல விரும்புகிறேன்," என்றார் உற்சாகத்துடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...