சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-இல் அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது!
கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது என்றாா் கண்காணிப்பாளா் சி.கஜேந்திரன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை தனது அடுத்த தலைமுறை பயன்பாட்டை டிஜிட்டல் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் மேலக்காவேரி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆக. 4-முதல் செயல்படுத்தப்படுகிறது.
மேம்பட்ட டிஜிட்டல் தளத்துக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான மாற்றத்தை உறுதி செய்யும் வகையில் ஆக. 2-சனிக்கிழமை சேவையில்லா நேரமாக மேற்கொள்ளப்படுகிறது. அன்று கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் எந்த ஒரு அஞ்சல் பரிவா்தனையும் நடைபெறாது. எனவே பொதுமக்கள் அஞ்சலக வருகைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.