இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 30 | Astrology | Bharathi Sridhar | ...
பாலியல் குற்றச்சாட்டு... மௌனம் கலைப்பாரா விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே 50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார்.
இதில், மகாராஜா திரைப்படம் அவரின் முதல் ரூ. 100 கோடி வசூலித்த திரைப்படமாகும். அண்மையில் வெளியான தலைவன் தலைவி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று, வணிக வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ரம்யா மோகன் என்பவர் பதிவிட்ட பதிவொன்று பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அப்பதிவில், “கோலிவுட்டின் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கேஸ்டிங் கவுச் (casting couch) கலாசாரம் விளையாட்டானது அல்ல. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் (ஊடக வெளிச்சம் கொண்டவர்) இந்த உலகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தற்போது, மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார். தொழில்துறை விதிமுறை என்கிற பெயரில் போதைப்பொருள், சூழ்ச்சி, பரிவர்த்தனை சுரண்டல்களே நடக்கின்றன. அப்பெண்ணுக்கு தன்னுடன் கேரவேனில் ஆசைக்கு இணங்க ரூ. 2 லட்சமும் பாலியல் விருப்பங்களுக்கு ரூ. 50 ஆயிரமும் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, சமூக ஊடகங்களில் புனிதராக நடிக்கிறார். இவர் அப்பெண்ணைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினார். இப்படித்தான் இங்கு பலருடைய கதையும் இருக்கிறது. ஆனால், சமூக வலைதளங்களில் ஆண்களைப் புனிதர்களாக வணங்குகின்றனர். போதைப்பொருளும் பாலியல் தொடர்பும் உண்மையானதுதான். விளையாட்டல!” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த, ஆதாரம் இல்லாமல் பதிவிடுவது வைரலாகத்தானே என ரம்யா மோகனைக் கேள்வி கேட்டனர்.
அதற்கு ரம்யா, “சில உணர்ச்சியற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும் பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் அதிக கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நாள்குறிப்பையும் தொலைபேசி உரையாடல்களையும் பார்த்தபோது இந்த உண்மை அவர் குடும்பத்தைப் புயல்போல தாக்கியது. இது வெறும் கதை இல்லை. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி...” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகி வருகிறது. ஆனால், ரம்யா மோகன் அப்பதிவை நீக்கிவிட்டார். அதேநேரம், பதிவைப் புகைப்படமாக எடுத்தவரின் பதிவில், “இந்தப் பதிவு இருக்கட்டும். அவர் (விஜய் சேதுபதி) மாட்டும்போது தேவைப்படும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!