இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலுக்கு சூப்பர் சுப்பு வரிகள் எழுத, சிவகார்த்திகேயன் பாடல் பாடியுள்ளார்.