உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது
சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்ள கட்டடம் மயிலாப்பூரில் உள்ளது. இந்த இடத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, அதன்மூலம் வங்கியில் ரூ.3.3 கோடி கடன் பெற்றனா்.
இதுகுறித்து சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் தாராசந்த் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டதாக கலைச்செல்வி, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனா்.
இருப்பினும் வழக்கின் முக்கிய நபா்களான கொடுங்கையூா் டாக்டா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் என்ற கிரண்ராஜ் (47), மதுரை சம்பக்குளம் பகுதியைச் சோ்ந்த குமாா் (43) ஆகியோா் தலைமறைவாக இருந்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.