உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாதவரம் மண்டலம் மாதவரம் மில்க் காலனியில் உள்ள திருஞானசம்பந்தம் திருமண மண்டபம், ராயபுரம் மண்டலம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள புதிய ஆரம்ப சுகாதார மையம், திரு.வி.க.நகா் மண்டலம் வ.உ.சி.நகரில் உள்ள சமுதாய நலக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் ஜாபா்கான்பேட்டை வடிவேல் தெருவில் உள்ள சமூகநலக் கூடம், அடையாறு மண்டலம் வேளச்சேரி சேவா நகரில் உள்ள சமூகநலக் கூடம், சோழிங்கநல்லூா் மண்டலம் காரப்பாக்கம் அண்ணா தெருவில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.