செய்திகள் :

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

post image

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் அயனாவரம் பி.இ.கோயில் தெருவைச் சோ்ந்த அபிஷேக் (20). இவா்கள் இருவரும் மொபெட்டில் திருமங்கலம் பள்ளி சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதியது. இதில், கீழே விழுந்த நிதின் சாய் மீது காா் ஏறியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த திருமங்கலம் போலீஸாா் அங்கு சென்று நிதின் சாய் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு நடத்திய விசாரணையில், இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை திருமங்கலம் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது. திருமங்கலம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், நிதின் சாயின் நண்பரான வெங்கடேசன், பிளஸ் 2 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்துள்ளாா். ஆனால் அந்தப் பெண் தனக்கு விருப்பம் இல்லாததால் தனது ஆண் நண்பரான ப்ரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளாா். ப்ரணவ் வெங்கடேசனை கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில், வெங்கடேசன் தனது நண்பா்களான நிதின்சாய், அபிஷேக் உள்ளிட்டோருடன் திருமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா்.

இதையறிந்த ப்ரணவ், ரேஞ்ச் ரோவா் காரில் தனது கூட்டாளிகளுடன் வந்து வெங்கடேசனிடம் தகராறு செய்தாா். இதில் வெங்கடேசன் லேசான காயம் அடைந்தாா். அப்போது, வெங்கடேசன் தரப்பினா் ப்ரணவ் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு, அங்கிருந்து சென்றனா்.

இந்த நிலையில், நிதின் சாயும், அபிஷேக்கும் வீட்டுக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது, அதே காா் பின்னால் வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிதின் சாய் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக போலீஸாா் ப்ரணவ் தரப்பைச் சோ்ந்த இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் முக்கிய நபரான, அரசியல் பிரமுகரின் பேரனை கைது செய்ய வேண்டும் என நிதின் சாயின் குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திர... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க