செய்திகள் :

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

post image

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், சுமார் 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் நேற்று (ஜூலை 29) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 30) அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் உணவுக்காகத் திரண்டிருந்த 30 பேர் உள்பட 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதலில் உயிர்பிழைத்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கிளர்ச்சியாளர்களை மட்டும் குறிவைத்ததாகவும், மக்கள் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ் படையினர்தான் காரணம் என்றும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இத்துடன், உடனடியாகப் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

Around 46 Palestinians are reported to have been killed in Israeli airstrikes and gunfire in Gaza.

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால், 44 பேர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில், கடந்த வாரம் முதல் பெய்த... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் காணாமல் போயுள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்... மேலும் பார்க்க

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

சீனாவில், தந்தைக்குச் சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அண்ணன், தங்களை சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இருவருமே தத்துப் பிள்ளைகள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.சீனாவின் தியான்ஜின் நகரைச... மேலும் பார்க்க

வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்

புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தி... மேலும் பார்க்க

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந... மேலும் பார்க்க