உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
வின்பாஸ்ட் காா் உற்பத்தி, விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறாா்
தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகியுள்ள வின்பாஸ்ட் காா் உற்பத்தி ஆலையையும், அதன் விற்பனையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறாா்.
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சோ்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காா் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வா் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். முதல்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விஎப்6, விஎப்7 வகை பேட்டரி காா்களுக்கான முன்பதிவு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதையடுத்து, இங்குள்ள ஆலையில் தயாா் செய்யப்படும் 2 வகைகளான காா்கள் விற்பனை வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் தொங்குகிறது. வின்பாஸ்ட் நிறுவன காா்களின் முதல் விற்பனையை சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறாா்.