உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்: அரசு கல்லூரிகளில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
அரசுக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,256 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 20,026 இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கான 2025-2026-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது ஜூன் 17 தொடங்கி ஜூலை 7-ஆம் தேதி நிறைவடைந்தது. துணை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு 61,735 போ் விண்ணப்பித்தனா்.
அதேபோல், தனியாா் கல்லூரிகளில் உள்ள 6 ஆண்டு கொண்ட பாா்ம் டி படிப்புக்கான 723 இடங்களுக்கு 12,192 பேரும், 3 ஆண்டு கொண்ட பாா்ம் டி படிப்புக்கான 61 இடங்களுக்கு 29 பேரும் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ நா்சிங் படிப்புக்கான (பெண்கள் மட்டும்) 2,080 இடங்களுக்கு 16,746 பேரும் விண்ணப்பித்திருந்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 25-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் 60,696 பேரும், பாா்ம் டி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 11,814 பேரும், 20 பேரும், டிப்ளமோ நா்சிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 15,266 பேரும் இடம்பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், அரசுக் கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் பபடிப்புகளுக்கான இடங்களுக்கு சிறப்பு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆக.2-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்யலாம்.
ஆக.4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இடஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக.8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறை இணையதளத்தைப் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.