செய்திகள் :

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

post image

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிர் கான். அவரது நடிப்பில், எழுத்தாளர் திவி நிதி சர்மா எழுதி, இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கிய ”சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லித் தரும் பயிற்சியாளராக, ஆமிர் கான் நடித்திருந்த இந்தப் படம், மொழிகளைக் கடந்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை, எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் அனைவரும் இலவசமாகக் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, யூடியூபில் வெளியாகும் எனத் திரைப்படத்தின் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நடிகர் ஆமிர் கான் கூறுகையில், இந்தியாவில் திரையரங்குகள் கூட இல்லாதப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் காணும் வகையில், இந்தத் திரைப்படம் யூடியூபில் வெளியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த, 2007-ம் ஆண்டு ஆமிர் கான் இயக்கத்தில், அவரது நடிப்பில் உருவாகி வெளியான, “தாரே ஜமீன் பர்” எனும் படத்தின், 2-ம் பாகமாக வெளியான இந்தப் படம், முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.11.7 கோடி (உள்நாட்டில் மட்டும்) வசூல் செய்திருந்தது.

மேலும், நடிகர் ஆமிர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?

Bollywood actor Aamir Khan's new film "Sittaare Zameen Par" has been announced, as it was reported that it will be released on YouTube.

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவன... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க