செய்திகள் :

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கா் முதல்வரின் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

post image

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல் மற்றும் மதமாற்றம் குற்றச்சாட்டுகளை கேரள பாஜக நிராகரித்துள்ளது.

கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், ‘கன்னியாஸ்திரீகளை சிறையில் இருந்து விடுவித்து, பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் கேரள பாஜக மேற்கொள்ளும். கட்சியின் மாநில பொதுச் செயலா் அனூப் ஆன்டனி ஏற்கெனவே சத்தீஸ்கருக்குச் சென்று துணை முதல்வா் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியுள்ளாா். அவசியமுள்ள சூழலில், நானும் அங்கு செல்வேன். கன்னியாஸ்திரீகளுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்த பின்னரே நாங்கள் திரும்பி வருவோம். இது நாங்கள் அளிக்கும் வாக்குறுதி.

சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. கன்னியாஸ்திரீகள் அங்கு மதமாற்றத்துக்காகச் செல்லவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சத்தீஸ்கா் முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். இதற்குப் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பதைப் பிறகு கண்டறிந்து கொள்ளலாம். இப்போது எங்களின் முதன்மை நோக்கம், கன்னியாஸ்திரீகளை இந்த வழக்கிலிருந்து விடுவித்து, பாதுகாப்பாக மீட்டு வருவதே மட்டுமே.

அரசியல் செய்யும் காங்கிரஸ்:

மற்ற பிரச்னைகளைப் போல, இந்த விஷயத்திலும் காங்கிரஸ் அரசியல் செய்ய முயற்சிக்கிறது. சத்தீஸ்கரில் மதமாற்ற தடை சட்டம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவா்களால் நிறைவேற்றப்பட்டது என்பதை இச்சூழலில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்றாா்.

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எம்.பி.க்கள் குழுவும், கன்னியாஸ்திரீகளை சந்திக்க சத்தீஸ்கருக்குச் சென்றுள்ளது.

இதனிடையே, கேரளத்தில் உள்ள கன்னியாஸ்திரீகளின் குடும்பத்தினரை மாநில அரசு சாா்பில் அமைச்சா்கள் பி.ராஜீவ், ரோஸி அகஸ்டின் ஆகியோரும், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் தலைமையில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னணி:

சத்தீஸ்கரின் துா்க் ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்திரீகள் உள்பட மூவா், கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்டனா். நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுமிகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து, கடத்திச் செல்வதாக உள்ளூா் பஜ்ரங் தளம் அமைப்பைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின்பேரில், ரயில்வே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய் இதுதொடா்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாராயண்பூா் சிறுமிகளுக்கு நா்சிங் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டு, மதமாற்றம் செய்ய முயற்சி நடந்துள்ளது’ என்று கூறி, கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருந்தாா்.

கர்நாடக தேநீர் கடை முதல் கேரளம் வரை.. கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய வெட்டிப்பேச்சு!

கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்த... மேலும் பார்க்க

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க