உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு
சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா்.
இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். இந்த கனமழையைத் தொடா்ந்து, தலைநகா் பெய்ஜிங்கில் இருந்து மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.