செய்திகள் :

ITR Filing: நீங்களே ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி? |Step by Step Explained

post image

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வருமான வரித் தாக்கலை நாமே ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்... அது எப்படி என்கிற ஸ்டெப் பை ஸ்டெப் பிராசஸைப் பார்க்கலாம்... வாங்க...

> www.incometax.gov.in என்கிற வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.

> முகப்பு பக்கத்தில் இருக்கும், 'Log in'-ஐ கிளிக் செய்து, உங்களது பான் எண் அல்லது ஏதேனும் ஒரு அரசு ஐ.டி நம்பரை உள்ளீடு செய்யவும். முதன்முறையாக, இந்த இணையதளத்திற்குள் வருபவர்கள் 'Register'-ஐ தட்டி, புதிதாக பதிவு செய்துகொள்ளலாம்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், 'Assesment Year'-ல் '2025 - 2026'-ஐ க்ளிக் செய்யவும்.

> அடுத்ததாக, 'Select Mode of Filing'-ல் 'Online'-ஐ தட்டவும்.

> 'Start New Filing' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

வருமான வரி கணக்குத் தாக்கல்
வருமான வரி கணக்குத் தாக்கல்

> தனிநபர் (Individual), இந்து கூட்டுக் குடும்பம் (HUF), பிற (Others) என்று மூன்று ஆப்ஷன்கள் காட்டும். அதில், நீங்கள் தனிநபர் எனில் ‘Individual' என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

> இங்கே, உங்களது வருமான வரிப் படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சம்பளதாரர்கள் எனில், 'ITR 1'-யும், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், பங்கு வருமானம், வெளிநாட்டு வருமானம், விவசாய வருமானம் போன்ற வருமானம் உள்ளவர்கள் 'ITR 2'-யும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, 'Proceed'.

> இப்போது, 'Let's Get Started’-ஐ தட்டுங்கள்.

> அடுத்ததாக, நீங்கள் எதற்காக வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

> அடுத்த பக்கத்தில், அங்கே கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்கள் சரியா என்பதை செக் செய்துகொள்ளவும். எதாவது மாற்றங்கள் இருந்தால், அதை இங்கேயே செய்துகொள்ளுங்கள். அடுத்து, 'Confirm'.

> இரண்டாவதாக இருக்கும் உங்களது மொத்த வருமானம் குறித்த விவரங்களை சரிபார்க்கவும்.

> மூன்றாவதாக இருக்கும் 'Total Deductions'-ஐ செக் செய்யவும்.

> 'Tax Paid' ஆப்ஷனில் நீங்கள் செலுத்திய TDS, TCS போன்ற விவரங்களை சரிபார்க்கவும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்
வருமான வரி கணக்குத் தாக்கல்

> 'Verify your tax liability details'-ல் வருமானக் கணக்கீடு மற்றும் வரிக் கணக்கீட்டை செக் செய்யவும்.

> இப்போது 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், நீங்கள் செலுத்த வேண்டிய வரி விவரங்கள் வரும்.

> 'Preview and Submit the Return' க்ளிக் செய்யுங்கள்.> இந்தப் பக்கத்தில் அனைத்துத் தகவல்களையும் சரிபாருங்கள்.

> இங்கே வருமான வரிப் படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

> 'Proceed to Validation'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> 'Validation Successful' என வந்தப் பின் 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இங்கே 'e-Verify now'-ஐ தட்டுங்கள்.

> மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

> அடுத்து, 'Submit'.

> இப்போது உங்களது வருமான வரித் தாக்கல் பிராசஸ் சக்சஸ். இங்கேயே உங்களது ரெசிப்டை டவுன்லோட் செய்யலாம் அல்லது உங்கள் மெயிலுக்கும் இந்த ரெசிப்ட் வரும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி?ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!ஸ்டாக் மார்க்கெட் என்றாலேபயமும் பதட்டமுமாகஇருக்கிறது. ரிஸ்க் எடுக்காமல் நல்ல லாபம் வரும் முதலீடேகிடையாதா? முதலீடு செய்ய வேண்டும் என ந... மேலும் பார்க்க

வயது 30..? காப்பீடு, ஓய்வுக்கால முதலீடு, சொந்த வீடு, குழந்தைகள் படிப்பு... இப்படி பிளான் பண்ணுங்க!

உங்களுக்கு 30 வயதா... இதுவரை இருந்த பொறுப்புணர்வு, இப்போது உங்களுக்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். காரணம்... அடுத்தடுத்து உங்கள் கண் முன்னால் குழந்தைகள் எதிர்காலம், வீடு, பெற்றோர்களின் நலன் என பல முக்க... மேலும் பார்க்க

60 வயதில் ஓய்வா? உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?

வாழ்க்கையில் இரு வேறான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.வாழ்நாள் முழுக்க வேலை செய்துகொண்டேஇருப்பவர் ஒரு ரகம்.தான் வேலைக்கு செல்லாமல், தன் பணத்தைவேலை செய்ய வைப்பவர் மற்றொரு ரகம்.இதில் நீங்கள் யாராக இருக்க... மேலும் பார்க்க

ITR Filing: ஆன்லைனில் செய்வது எப்படி, செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், வரிச் சலுகை... - முழு தகவல்

வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் வந்துவிட்டது. எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? தவறாகிவிட்டால் என்ன செய்வது?... - இப்படி ஏகப்பட்ட குழப்பங்களும், சந்தேகங்களும் உங்களது மூளையில் ஓடிகொண... மேலும் பார்க்க

நீங்க NRI-ஆ? 45 வயதில் ரிட்டையர் ஆகணுமா?

நீங்க ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்க வயது 40-க்குள்ளயா? இன்னும் 10-15 வருடங்களிலேயே ரிட்டையர் ஆகி, நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா செட்டில் ஆகலாம்னுசொன்னா உங்களால நம்ப முடியுதா?பொதுவா வெளிநாடு வாழ் இந... மேலும் பார்க்க

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!

'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்க... மேலும் பார்க்க