செய்திகள் :

வயது 30..? காப்பீடு, ஓய்வுக்கால முதலீடு, சொந்த வீடு, குழந்தைகள் படிப்பு... இப்படி பிளான் பண்ணுங்க!

post image

உங்களுக்கு 30 வயதா... இதுவரை இருந்த பொறுப்புணர்வு, இப்போது உங்களுக்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். காரணம்... அடுத்தடுத்து உங்கள் கண் முன்னால் குழந்தைகள் எதிர்காலம், வீடு, பெற்றோர்களின் நலன் என பல முக்கியமான விஷயங்கள் நிற்கும்.

இவைகளை அசால்டாக கையாளக் கூடிய நிதி டிப்ஸ்களை வழங்குகிறர் நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்.
லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

"தரவுகளின் படி, 30 வயது உள்ள ஒரு நபரின் வருமானம் ரூ.60,000-ல் இருந்து ரூ.1 லட்சம் வரை இருக்கிறது. இதில், அவர்கள் குறைந்தது ரூ.20,000-ஐ சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு அவசியம் எடுத்து வைக்க வேண்டும்.

முன்னே சொல்லி இருக்கும் வாக்கியத்தை, மீண்டும் ஒரு முறை படித்து, 'குறைந்தது' என்னும் வார்த்தையை கட்டாயம் நோட் செய்யுங்கள். காரணம், ரூ.20,000-க்கு மேலும், 30 வயது உள்ள ஒருவரால் ஒதுக்க முடியும் என்றால், அது 'சூப்பரோ சூப்பர்'.

ஆனால், இது கூட ஒதுக்க முடியவில்லை என்றால் அது கவலைக்கிடம். குறைந்த சம்பளத்தால், இந்தத் தொகையை ஒதுக்க முடியவில்லை எனில், உங்களது கரியருக்கு சம்பந்தப்பட்ட திறனை வளர்த்துகொள்ளுங்கள்.

இல்லை... 'சம்பளம் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது... ஆனால், செலவுகள் தான் அதிகம்' என்று தலையை சொறிபவர்கள், உங்களது செலவுகள் மற்றும் கடன்களை கட்டாயம் ரிவ்யூ செய்யுங்கள்.

இப்போது... ரூ.20,000-க்கு வருவோம்.

30 வயது உள்ள ஒருவர், ரூ.20,000-த்தை 4 தேவைகளுக்காக பிரிக்கலாம்.

இந்த 4 முதலீடுகளில் மிக முக்கியமான இரண்டு. காப்பீடுகள் - ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகும்.

1. ஆயுள் காப்பீடு - இதற்கு மாதம் குறைந்தது ரூ.1,000 ஆகும்.

2. மருத்துவக் காப்பீடு - உங்களது நிறுவனங்களிலேயே இந்தக் காப்பீட்டை வழங்கினால், தாராளமாக எடுத்துகொள்ளுங்கள். ஆனால், இது அனைத்து நிறுவனங்களிலும் கிடைக்காது.

காப்பீடு
காப்பீடு

அப்படி இல்லாத சூழலில், குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 பிரீமியம் கட்ட வேண்டியதாக இருக்கும்.

பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம் எடுத்துவிடுங்கள். காரணம், அவர்களுக்கு தான் இது அதிக தேவை. இதற்கு ரூ.2,000 ஆகும்.

இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்திற்கு தற்போது இ.எம்.ஐ வந்துவிட்டது. அதனால், மாதா மாதம் இப்படி சின்ன சின்ன தொகையைக் கட்டும்போது, உங்களுக்கு பெரிதாக தெரியாது.

ஆக, இரண்டு காப்பீடுகளுக்கு ரூ.5,000 ஆகிவிட்டது. இவற்றை கட்டாயம் செய்துவிட வேண்டும்.

3. ஓய்வுக்கான பிளான் இருப்பவர்கள், மாதம் குறைந்தது ரூ.10,000-த்தை ஓய்வுக்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

4. குழந்தையின் எதிர்கால படிப்பு செலவுக்கு மாதம் ரூ.5,000. குழந்தை எல்.கே.ஜி சேரும் போது, இந்த சேமிப்பை தொடங்கினால் போதுமானது.

ஆக, இது தான் ரூ.20,000-க்கான பக்கா கணக்கு.

ரூ.5,000 - 10,000 தான் சேமிக்க முடியுமா?

ஒருவேளை, என்னால் ரூ.5,000, ரூ.10,000 தான் சேர்க்க முடியும் என்பவர்கள், காப்பீடுகளில் கவனம் செலுத்தலாம். இது போக, எக்ஸ்ட்ரா ஏதேனும் இருந்தால், எதிர்காலத்திற்கு சேமிக்கலாம்.

சொந்த வீடு
சொந்த வீடு

சொந்த வீட்டிற்கு என்ன பிளான்?

சொந்த வீடு வேண்டும் என்பவர்கள், ரூ.20,000-த்தை தாண்டி, உங்கள் கையில் எவ்வளவு காசு இருக்கிறதோ, அதை வீட்டிற்கு ஒதுக்கிவிடுங்கள்.

இதை குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது செய்ய வேண்டும். இந்தத் தொகையை டவுன் பேமென்டிற்கு பயன்படுத்தலாம்.

இந்த முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டில் தான் போட வேண்டும் என்பது அவசியமில்லை. ரிஸ்க் இல்லாத முதலீடுகளை கூட, இதற்கு பயன்படுத்தலாம்.

படிப்பிற்கு...

பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம்; ஆண் குழந்தைகளுக்கு பி.பி.எஃப்.

இது வரி இல்லாத மற்றும் ரிஸ்க் இல்லாத முதலீடுகள் ஆகும். அதனால், இது பெஸ்ட் சாய்ஸ்.

ஓய்வுக்கால முதலீடுகளுக்கு...

ரூ.10,000-த்தை மூன்றாக பிரியுங்கள். முதல் ரூ.3,000-த்தை என்.பி.எஸிலும், ரூ.3,000 தங்கத்திலும், ரூ.4,000-த்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு டைவரிஸிஃபைடு முதலீடாக இருக்கும்".

60 வயதில் ஓய்வா? உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?

வாழ்க்கையில் இரு வேறான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.வாழ்நாள் முழுக்க வேலை செய்துகொண்டேஇருப்பவர் ஒரு ரகம்.தான் வேலைக்கு செல்லாமல், தன் பணத்தைவேலை செய்ய வைப்பவர் மற்றொரு ரகம்.இதில் நீங்கள் யாராக இருக்க... மேலும் பார்க்க

ITR Filing: ஆன்லைனில் செய்வது எப்படி, செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், வரிச் சலுகை... - முழு தகவல்

வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் வந்துவிட்டது. எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? தவறாகிவிட்டால் என்ன செய்வது?... - இப்படி ஏகப்பட்ட குழப்பங்களும், சந்தேகங்களும் உங்களது மூளையில் ஓடிகொண... மேலும் பார்க்க

நீங்க NRI-ஆ? 45 வயதில் ரிட்டையர் ஆகணுமா?

நீங்க ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்க வயது 40-க்குள்ளயா? இன்னும் 10-15 வருடங்களிலேயே ரிட்டையர் ஆகி, நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா செட்டில் ஆகலாம்னுசொன்னா உங்களால நம்ப முடியுதா?பொதுவா வெளிநாடு வாழ் இந... மேலும் பார்க்க

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!

'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்க... மேலும் பார்க்க

நீங்க பிசினஸ் ஓனரா? சிறு குறு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்! - விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க!நீங்க ஒரு பிசினஸ் ஓனரா?சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா?உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா?உங்களின் பிசினஸ் லாபத்தை... மேலும் பார்க்க

LIC: இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. ஆர்.துரைசாமி

லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக திரு.ஆர்.துரைசாமி பொறுப்பேற்றிருக்கிறார்.LIC | எல்ஐசி இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் ... மேலும் பார்க்க