செய்திகள் :

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

post image

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 150 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது திண்ம எரிபொருளுடன் தாழ்வான பகுதிகளில் இலக்குகளுக்கு ஏற்ப திசையை மாற்றி அதிவேகத்தில் பயணிக்கும் (குவாசி பலிஸ்டிக் ஏவுகணை) பலிஸ்டிக் ரக ஏவுகணையாகும். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வலிமையுடையது. எனவே, எதிரிகள் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினமானது.

இந்த ஏவுகணையின் இரு சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிஸா மாநில கடலோரம் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிரளய் ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இயக்கத் திறனை மதிப்பிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், இலக்குகளைத் துல்லியமாக தாக்குவது உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த ஏவுகணையை இமாரத் ஆய்வு மையம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் டிஆா்டிஓவின் பிற ஆய்வகங்கள் ஒன்றிணைந்து வடிவமைத்துள்ளன.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

கர்நாடக தேநீர் கடை முதல் கேரளம் வரை.. கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய வெட்டிப்பேச்சு!

கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்த... மேலும் பார்க்க

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க