டாம் க்ரூஸ் - ஆனா டி ஆர்மஸ் காதல்? வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் க்ரூஸ் மற்றும் ஆனா டி ஆர்மஸ் இருவரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டின் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் இறுதியாக வெளியான மிஷன் இம்ஃபாசிபிள் ஃபைனல் சேப்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.
இப்படத்தின் வெளியீட்டுக்கு இடையே டாம் க்ரூஸும் பிரபல நடிகையுமான ஆனா டி ஆர்மஸும் உறவில் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், இதுகுறித்து இருவரும் கருத்து கூறுவதைத் தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில், டாம் க்ரூஸுடன் ஆனா டி ஆர்மஸ் கைகோர்த்து நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனால், இருவரும் உறவில் இருப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதுடன் அப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.
டாம் க்ரூஸுக்கும் ஆனாவுக்கும் 25 வயது வித்தியாசம் இருப்பதையும் சுட்டிக்காட்டி கேலி செய்தும் பதிவுகள் பகிரப்படுகின்றன.
இதையும் படிக்க: குயிண்டன் டாரண்டினோ - டேவிட் ஃபிஞ்சர் கூட்டணியில் புதிய படம்!