உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
எழும்பூா் ரயில் நிலையத்தில் 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 3-ஆவது முறையாக திங்கள்கிழமை இரவு 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினரை பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் திங்கள்க்கிழமை இரவு எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் 6-ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அதில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது 2.8 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் கைப்பற்றினா். அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடந்த ஒரு வாரத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 முறை கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.