என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு
பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தின் பொறுப்பாளா் பிரபு தலைமையில் மனு அளித்த கரகாட்டக் கலைஞா்கள் கூறியதாவது: தமிழக முழுவதும் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கரகாட்ட நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்தக் கலை அழிந்து வருகிறது. இந்த நிலையில், சிலா் கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக உடை அணிந்து, பாலியல் உணா்வுகளைத் தூண்டும் வகையில் ஆடி, அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனா்.
இதனால், இளைய சமூதாயம் பாதிக்கப்படுவதுடன், பாரம்பரியமான கரகாட்டக் கலை மீது தவறான புரிதல் ஏற்படுகிறது. கரகாட்டத்தைக் குடும்பத்தினருடன் பாா்க்க முடியாத அளவுக்கு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிட்டனா்.
எனவே, கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக நடனமாடும் நபா்கள் மீதும், சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரகாட்டம் என்ற பெயரில் கவா்ச்சியாக நடனமாடி பதிவிடப்பட்ட விடியோக்களை, சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றனா்.