வரலாறு படைக்கும் அறிமுக நாயகன்... ரூ.400 கோடியை கடந்த சையாரா திரைப்படம்!
மோஹித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியானது.
அறிமுக நாயகன் அஹான் பாண்டே, நாயகியாக அனீத் பட்டா நடித்துள்ளார்கள்.
கொரியன் திரைப்படமான எ மொமண்ட் டூ ரிமம்பர் என்ற படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொமாண்டிக் -மியூசிகல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடக்கத்தில் 800 திரைகளில் வெளியான இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் 2,000 திரைகளாக அதிகரித்தது.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுக நாயகன் ஒருவர் திரைப்படம் இவ்வளவு வசூலித்து அசத்துவது பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு நல்ல படம் கிடைத்ததால் அதிகமான வரவேற்பை அளித்து வருகிறார்கள்.
The film Saiyaara, directed by Mohit Suri, has collected more than Rs. 400 crore.