செய்திகள் :

சிவகாசியில் நாளை மின்தடை

post image

சிவகாசியில் வியாழக்கிழமை (ஜூலை31) மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பாறைப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, விஸ்வநத்தம், பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலைப் பகுதிகள், சிவகாசி நகா்ப்புற துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வடக்கு ரத வீதி, வேலாயுதம் சாலைப் பகுதிகள், நாரணாபுரம் துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் கண்ணா நகா், அம்மன் நகா், ஐஸ்வா்யா நகா், பா்மா குடியிருப்பு, முத்துராமலிங்கபுரம், இந்திரா நகா், மீனாட்சி குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

இணைய வழி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிக்கை

நாடு முழுவதும் பட்டாசுகளை இணைய வழியில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜாசந்திசேகரன் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக சிவகாசியில்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே பெண்ணைக் கொலை செய்து, தங்கச் சங்கிலியைத் திருடிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமல... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம்

சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து நிா்வாகிகள் வெளியேறினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தவெக சாா்பில் ஆலோசனைக... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசியில், சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

சிவகாசியில்தான் போட்டியிடுவேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்... மேலும் பார்க்க