செய்திகள் :

அம்மாவின் நாப்கின் - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்று சனிக்கிழமை வாரத்தில் மட்டுமல்ல மாதத்திலும்  பொதுவாக மாதக் கடைசி இரண்டு சனிக்கிழமை நிறுவனத்தின் மேலாளருக்கு விடுமுறை அதனால் ஊழியர்கள் அனைவரும் சாதாரணமாகவே திரிவார்கள். எந்த கட்டும் படும் இல்லை மற்ற நாட்களை விட சற்று மந்தமாக தான் வேலை நடக்கும்.

பெரிதாக எந்த வேலையும் இழுத்துக் கொண்டு செய்ய மாட்டார்கள். சனிக்கிழமை மட்டும் தகுதிக்கு மேலான வேலையும் நல்ல பெயர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கும். யாருக்காகவும் எதற்காகவும் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உண்மையில் அப்படி பட்ட மனிதர்கள் தான் அவர்களின் உண்மை முகம். மற்ற நாட்கள் எல்லாம் சம்பதிற்காகவும் வருங்கால முற்றேற்றதிற்காகவும் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான்.

எனது துறையில் மொத்தம் ஐந்து பேர் நான் தற்போது தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்தே மூன்று மாதம் தான் ஆகிறது தனக்கென்று ஒரு கணினி வேலை செய்வதற்கான தனி கேபின் என இடம் பெற்றிருந்தாலும் அரட்டை அடிக்கும் பொழுது அனைத்து நாற்காலிகளும் ஒன்று கூடிவிடும்.அன்று சனிக்கிழமை என்பதால் அந்த நாற்காலிகளுக்கு ஒன்று கூடுதல் விழா மட்டுமே நடைபெற்றது.

ஒவ்வொருவரும் பேச்சு சுவாரசியத்திற்காக ஒவ்வொரு நாற்காலியாக சேர்ந்து கொண்டே இருந்தது.நேற்று இறங்கிய புது படத்தை பற்றி அனைவரும் ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் புகழ்ச்சி ஒரு பக்கம் குறை என நீண்டு கொண்டே இருந்தது அந்த வாதம் எனக்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் என்னுடைய சீனியர் என்பதால் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? அலுவலகத்திற்குள் நுழைந்ததும் முதல் ஆளாக எனது கணினி இருக்கும் நேற்று கொடுத்த மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் வராமல் அனைவரும் இருந்தார்கள் நான் அதைப் பற்றி அந்த உரையாடலை உடைத்துக் கொண்டு நான் பேசத் தொடங்கினேன்.

காது கொடுத்து கேட்டார்களே தவிர அந்த மின்னஞ்சல் காண பதிலை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. நானும் மீண்டும் கணினி திரையை நோக்கி எனது கை விசைப்பலையுடன் நடனமான தொடங்கியது.

இன்னும் அந்த அழைப்பு ஏன் வரவில்லை காலையில் அழைத்த குட் மார்னிங் கூட இன்னும் அவள் பார்க்கவே இல்லை.இன்று சனிக்கிழமை தானே அவளுக்கும் அலுவலகம் தானே ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை என குழப்பம் ஒரு பக்கம் என் மூளையை உலாவிக் கொண்டே இருந்தது. சரியாக மணி 8.45 கடந்து விட்டது 8:30 மணிக்கு எல்லாம் 5 10 நிமிடம் காலதாமதத்தில் அந்த அழைப்பு வந்துவிடும் ஆனால் இன்று அழைப்பு வரவில்லை அந்த கால் மணி நேர இடைவெளியில் 10 தடவைக்கு மேல் என் அலைபேசியின் திரை மெனுகிக் கொண்டிருக்கும் ஆனாலும் அந்த குறுஞ்செய்தி இன்னும் பார்க்கப்படவில்லை.

காலையில் அம்மா வைத்த சாப்பாடு சரியாக இல்லாததால் ஒழுங்காக சாப்பிடாமல் வைத்து விட்டதால் எனது வயிறு குடலை தின்ற ஆரம்பித்தது. சரி ஒரு தேநீர் அருந்தி விட்டு வரலாம் என அலுவலக கேண்டீனை நோக்கி நடந்தேன் 8:30 க்கு வர வேண்டிய அதே குறுஞ்செய்தியின் அழைப்பும் 9 மணி தாண்டி வந்தது...

“குட் மார்னிங் தங்கம் “என்ற குறுஞ்செய்திக்கு பதிலாக “குட் மார்னிங் மா” என்று வந்தது. அடுத்த வினாடியே அதற்கு பதில் அளிக்கிறேன் இன்னும் அலுவலகம் கிளம்பவில்லையா?

அலுவலகம் விடுமுறையா?

உடம்பு ஏதேனும் சரியில்லையா?

என அத்தனை கேள்விகளும் பதில் வராமலேயே அனுப்பிக் கொண்டிருந்தேன்..

அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் “பீரியட்ஸ்” அதனால லீவு..

“சரிமா உடம்ப பாத்துக்க ரெஸ்ட் எடு” என்பதை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு

“ஃப்ரீயா இருந்தா கால் பண்ணு”

என்பதையும் அந்தக் குறுஞ்செய்தி உடன் இணைத்து விட்டேன்..

தேனீர் அருந்திக் கொண்டிருக்கும் வரை அந்த துவண்டு போன முகமும்,உணர்ச்சி இல்லாத குறுஞ்செய்தி, தான் என் மனம் முழுக்க ஓடிக்கொண்டிருந்தது ஏன் பெண்களுக்கு மட்டும் அப்படி ஒரு வலி ஒருவேளை அந்த வலியை பங்கெடுக்கும் உரிமை இருந்தால் எத்தனை ஆண்கள் போட்டி போட்டு இருப்பார்கள்... மொத்த வலியும் அவளுக்கு பிடித்த ஆணிடம் கொடுத்து அவளை அழகுபட பார்த்திருப்பான்.அவன் என்ன செய்ய முடியும் இயற்கையை மாற்றி எழுதும் சக்தி காதலுக்கு மட்டும் என்ன வந்து விடவா போகிறது.?

“மாதவிடாயை அசோகரியம் என்று சொல்லிப் பழகுங்கள் அப்போதாவது அது வேறுபடாமல் இருக்கிறதா”

என்று பார்க்கலாம் என்று எங்கோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்து சென்றது..

என் அலுவலகத்தில் விடுப்பு எடுக்காமல் வரும் சில ஏழைப் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்.அவர்களுக்கும் வலி இருக்க தானே செய்யும் எப்படி பொறுத்துக் கொண்டு பத்து மணி நேரத்திற்கு மேலாக அலுவலகமே கதி என இருக்கிறார்கள்.வறுமை வந்தால் வலி கூட மறந்து போகுமா? என்னவோ?...

நீண்ட நேர ருசி இல்லாத தேனீரை அருந்த பிறகு மீண்டும் அலுவலக அறை நோக்கி நடந்தேன். நகர்ந்து கொண்டிருக்கும் பொழுதே எனது அலைபேசி எண் மணி ஒலித்தது

“அன்பான என்னவள்” என பெயர் முத்திரை குத்தப்பட்டிருப்பதை சிறிய புன்னகையுடன் எடுத்தேன்.

ஹலோ...

மிகவும் தேய்ந்து போன அந்த குரலில்

ஹலோ...

என்று பதில் சொன்னது

ஆபீஸ் போயிட்டியா?

ஆமா ஆபீஸ்ல தான் இருக்கேன்?

ஏன் ரொம்ப முடியலையா?

ஆமா காலையிலிருந்து ரொம்ப வயிறு வலி என்னால முடியல.

சரி அதான் லீவு எடுக்கலாம்னு லீவு எடுத்துட்டேன்...

சரி சரி வேல எதுவும் பார்க்காத

கொஞ்சம் வீட்ல ரெஸ்ட் எடு சரியாயிடும்...

ரொம்ப முடியலன்னா டேப்லட் ஏதாவது போட்டுக்க

ம்மம்...

என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாக அங்கிருந்து வந்தது..

எப்போதும் கலகலப்பான இருக்கும் அந்த குரல்... வசீகரத்தை அப்படியே கொடுக்கும் அந்த குரல்....

அன்று எந்த உணர்வும் இல்லாமல் தேய்ந்த நிலையில் என் காதுகள் வாங்கியது.மீண்டும் மீண்டும் அந்த குரலை கேட்பதற்கு மனமே வரவில்லை இருப்பினும் அந்த தொலை தொடர்பை ஆறுதலாக தொடங்க வேண்டும் என்பதில் மனம் விடாப்பிடியாக இருந்தது.

நான் மட்டும் நினைத்தால் போதுமா? எதிரே இருப்பவரும் நினைக்க வேண்டும் அல்லவா?

சரிப்பா நீ பார்த்து வேலை பாரு

நான் கொஞ்சம் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்

என்று அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது....

மீண்டும் அலுவலக அறையை நோக்கி நகர்ந்தேன்.

நான் எப்படி சென்றேனோ அப்படியே அந்த நாற்காலிகள் சேர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தது..

எனது கணினியில் உட்கார்ந்து ஒவ்வொரு கோப்புகளாக திரட்டி பார்க்க தொடங்கினேன்...

எனக்கு கொடுத்த வேலையை ஒவ்வொன்றாக பொறுமையாக செய்ய தொடங்கினேன்.. தேநீர் அருந்தியும் என் வயிறு கத்திக் கொண்டே தான் இருந்தது.எனது குரலை வயிறு சுரண்டிக் கொண்டிருக்கும் போது தான் நினைவு வந்தது காலையில் நாப்கின் கவரை எனக்கு தெரியாமல் மறைத்து வைத்து என் அம்மா என்னை கடந்து சென்றது..!!!

காதலிக்கு

மாதவிடாய் என்ற பொழுது

மனம் வலித்தது..

காலையில் அம்மாவிற்கும்

அதே வலி வந்த போது

மனம் மறுத்தது.

எழுதியவர்

ரசூல் முகைதீன் அப்பாஸ்

கன்னியாகுமரி மாவட்டம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

இதயத்தில் மலர்ந்த காதல்! - ஒரு மணமகனின் கவிதை போன்ற நினைவலைகள் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அப்பாக்களும் அழலாம்! - பெண்ணழைப்பு வைபவங்களின் அழகியல்| #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

முன் எப்பொழுதும் இல்லாத தனி லட்சணம் அவர் முகத்தில் அன்று கண்டேன்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மெட்ராஸ் : இது வெறும் நகரம் மட்டுமல்ல, நம்பிக்கை - சென்னை குறித்த அனுபவங்களை பகிருங்கள்!

சென்னை இது வெறும் நகரம் அல்ல. பலரின் நம்பிக்கை. மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான் புலம் பெயர்தலால் நாகரிகம் பெற்றோம். புலம் பெயர்தலால் வளர்ச்சி அடைந்தோம். புலம் ... மேலும் பார்க்க

விகடனும் நானும் !

விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச்... மேலும் பார்க்க

பறம்பின் குதிரை படை தளபதி இரவாதன் தான் என் ஃபேவரட்! | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க