2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
பறம்பின் குதிரை படை தளபதி இரவாதன் தான் என் ஃபேவரட்! | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வேள்பாரி வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே என் மனமும் கபிலருடன் சேர்ந்தே பறம்பில் பயணிக்க தொடங்கிவிட்டது. பாரி, ஆதினி, கபிலர், மயிலா, பொற்சுவை, அங்கவை, சங்கவை, தேக்கன், நீலன், முடியன், வாரிக்கையன், உதிரன், பழையன், கூழையன், காலம்பன், அலவன், இரவாதன், என ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.
நீலன் கபிலரிடம் கேட்கிறான். நீங்கள் சொல்லுகின்ற கடல் எப்படி இருக்கும் என்று. கபிலர் சொல்கிறார் பரந்து விரிந்து பெரிதாக இருக்கும் என்று. நீலன் திரும்ப கேட்கிறான், எங்கள் பாரியின் கருணையை விடவா?

மண்ணாசை கொண்டு குலங்களை அழிக்கும் மூவேந்தர்களின் படைகளிடம் சிக்கி தன் குலத்தை இழந்த, எஞ்சிய குலத்தின் கடைசி அடையாளம் பாரியிடம் அடைக்கலம் பெறுகிறார்கள். கேட்போருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் கடையெழு ஏழு வள்ளல்களுள் ஒருவனான வேள்பாரியின் கருணை கரங்கள் அன்போடு அரவணைத்துக் கொள்கின்றனர், அவனை நம்பி வருவோரை...
மண்ணாசையால் குலங்களை அழிக்கும் மூவேந்தர்களை அழிக்க கொற்றவையின் முன் பழி தீர்க்க சூளுரைச் செய்யும் பாரின் ஆட்டத்தால் பறம்பே அதிர்கிறது..
பறம்பின் மக்கள் வாழும் முறையும் பின்பற்றும் வழிகளும் சாப்பிடும் உணவும் வழிபடும் தெய்வமும் என ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது.
நிலத்தின் பெரும் புலவனாக திகழ்ந்த கபிலரும் பறம்பின் மலை ஏற தொடங்கிய நாளிலிருந்து பறம்பின் மக்களை கண்டு வியக்கிறார்.
பறம்பினில் புகுந்த எதிரிகளை அழிக்க பறம்பின் ஒப்பற்ற மாவீரனான வேள்பாரியும் அழிக்க முடியாத சுண்டாபூனையும் காடதிர, ஒரு சேர சென்று தாக்கும் காட்சிகள் பறம்பின் பிரம்மாண்டத்தை காட்டுகிறது.
சுண்டா பூனை, தன் அலகால் பருந்துகளை வேட்டையாடும் காக்கா விரிச்சி, குதிரையின் கழுத்தை ஒரேப்பிடியில் துண்டாக்கும் தோகை நாய், திசை காட்டும் தெய்வ வாக்கு விலங்கு (தேவாங்கு), அறுபதாங்கோழி, யாழி, சக்கரவாகப் பறவை என ஒவ்வொன்றும் அதன் சிறப்பால் வியப்பூட்டுகிறது.
பறம்பின் செல்வம், வளம், சோம பானம் எனப் பறம்பின் மீது படை எடுத்துச் செல்ல பல காரணங்கள், இருப்பினும் மூவேந்தர்களுக்கும் பொதுவாக அமைந்த காரணம் பாரின் புகழ் மட்டுமே..
மூவேந்தர்களுக்கும் பறம்பிற்கும் இடையில் நடக்கும் போரில் கடைபிடிக்கப்படும் உத்திகளும் செயல்படுத்தப்படும் திட்டங்களும் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் என ஒவ்வொன்றும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.. போரில் காட்டெருமைகளை பயன்படுத்துதல், காற்றின் உதவி கொண்டு அம்புகளை வீசுதல் என போரில் ஒவ்வொரு யுக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது..
எனக்கு பிடித்த கதாபாத்திரம் தளபதி முடியனின் மகனான வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்களின் படைகளை எதிர்த்து மூர்க்கத்தனமான வாள்வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பின் குதிரை படை தளபதி இரவாதன்.
வரம்பு மீறிய மூவேந்தர்களை அறம் தவறாது போரிட்டு மூவேந்தர்களையும் வென்ற மாவீரன் பறம்பை காக்கும் வேளீர் குலத் தலைவன் வேள்பாரியின் புகழ் என்றென்றும் சு.வெங்கடேசன் எழுத்தில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்...
நன்றி..!
மகேந்திரன்.செ
தூத்துக்குடி .
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.