செய்திகள் :

இன்னாருக்கு இன்னாரென்று! - அவளின் அழகிய கள்ளத்தனம் | ஆஹா கல்யாணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

“இன்னாருக்கு இன்னாரென்று  எழுதி வைத்தானே தேவன் அன்று”

கடவுள் அமைத்து வைத்த மேடை இனிக்கும் கல்யாண மேடை”.. 

என்ற பழைய பாடல் வரிகளை கேட்கும்போதெல்லாம் அதனை முணுமுணுத்தபடியே கடந்து விடுவோம் அதனை உள்ளாய்ந்து நோக்குகின்றபோதும் அதேபோன்று நாம் உய்த்துணறும்போதும் தான் எத்துனை நிதர்சனங்கள் அவ்வார்த்தைகளில் தொக்கி நிற்கிறது என்பதை நாம் அறிய இயலும். 

திருமணங்கள் யாவும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதோ இல்லையோ ? ஆனால் திருமண வாழ் வென்பதை சொர்க்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் திருமணத்தின் தலையாய நோக்கமாக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் காதலும், அன்பும் எப்போது கைகூடும் என்பதை துல்லியமிட்டுக் கூறவியலாது அது நொடிப்பொழுதுகளில்கூட நிகழ்ந்துவிடும் வீரியமிக்கது, எங்களது காதல் திருமணம் என்ற ஒன்றில்லை.

அது நிச்சயமாக இரு வீட்டினர் பார்த்து முடித்துவைத்திட்ட திருமணம்தான் எனினும் ஏதோ ஒரு புள்ளியில் எங்களிருவருக்குள்  ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளாமல் ஒரு நேசம் பூத்திருக்கிறது, இதனை ஒரு உள்ளார்ந்த விருப்பம் அல்லது ஆசை எனலாம்.

எனது ஒன்றுவிட்ட மாமாவின் மகள்தான் ஆனாலும் என்னுள் சிறுவயது முதல்  அவள்மீது எந்த ஒரு ஈர்ப்பும் பெரிதாக இருந்துவிடவில்லை என்பேன்!, இன்னும் சொல்லப்போனால் எங்கள் வீட்டிற்கு சிறுவயதிலும் பின்னர் அவள் பருவமெய்திய பிறகும் சிலமுறைகள் வந்ததுண்டு அப்போதும் அவள்மீது பெரிதாக ஈரப்பென்று வந்துவிடவில்லை.

ஆனால் காலச் சக்கரங்கள் சுழல பருவத்தின் மாற்றங்களில் வந்து புகுந்துகொண்டது அவளை மணம் கொள்ளவேண்டும் எனும் மாற்றம். 

கல்லூரி பருவத்தில் ஒருநாள் எனது தாய் அவளைத்தான் தனது மருமகளாக மனதில் சுவீகரித்திருக்கிறார் என்பதையும் எனது சகோதரிகளிடத்தும் அவ்வெண்ணம் புகுந்திருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

அப்போதுதான் என்னிருதயத்திற்குள்ளும் அவள் பற்றிய எண்ணங்கள் லேசாக துளிர்விட தொடங்கின.

அவள் தற்போது எப்படி இருக்கிறாள்?, என்ற பேரார்வம் இருதய சுவர்களைத் தாண்டி எட்டிப் பார்த்தது. இருப்பினும் இயல்பாக காலங்களை கடந்து கொண்டிருந்தேன்.

அந்த ஒருநாளும் வந்தது..

ஒருநாள் எனது ஒன்றுவிட்ட அண்ணனின் திருமண நிகழ்வு நடந்தது, அந்த திருமணத்திற்கு அவளும் தனது குடும்பத்தினரோடு வந்து கலந்து கொண்டிருந்தாள்.

ஏற்கனவே எனது வீட்டில் அவளைப் பற்றி குறிப்பிட்டிருந்ததால் பலமுறை அவளைப் பார்த்ததற்கும் இம்முறை அவளை நான் பார்ப்பதற்கும் பாரிய வித்தியாசங்களும், ஒரு இனம்புரியாத பரவசமும் என்னுள் பற்றிப் படர்வதை உணர முடிந்தது. 

அதுபோல அவளும் என்னைக் காணும் போதெல்லாம் இதழோரம் சிறுநகை பூக்க அறை சுவர்களையும், அடுக்களை  சுவர்களையும் தனது முந்தானையாக்கி மறைந்து கொள்ளலானாள். அப்படியும் ஒருசிலமுறை அவளை கண்டுவிட்ட எனது கண்களுக்குள் அவள் மறைய மறுத்து நீங்கா பிம்பமாக சில நாட்கள் சிறகடித்தாள். 

பின்னர் வந்த நாட்களில் அவள் பெயரையும், என் பெயரையும் இணைத்து என் மனதில் மண பத்திரிகை அடிக்கும் அளவிற்கு என் மனதோடு அவள் கலந்தாள். 

இருப்பினும் எது நடக்கவேண்டும் என்று இறை தீர்மானம் உள்ளதோ! அது நன்முறையில் நடந்தேறட்டும்! என அவள் மனதை நானறியமலேயே அல்லது அறிய முற்படாமலேயே காலங்கள் உருண்டோ டியது. 

அதற்கான நாளும் வந்தது, சரியாக ஒருவருடம் கடந்தபின்னர் எனது தாயிடமிருந்து தொலைபேசியில் வந்த அழைப்பு ஒரு இனம்புரியாத பதற்றத்தையும், பரவசத்தையும் அளித்தது. 

ஆம்! எனது திருமணம் விஷயமாகத்தான் பேசினார், உனக்கு திருமண செய்ய விரும்புகிறோம் என்றதும் அடுத்த வார்த்தையை எதிர்நோக்க எனது மனதையும், செவிப்பறைகளையும்  ஒருசேர தயார் செய்து வைத்திருந்தேன் அடுத்ததாக என்ன வார்த்தை வந்து விழப்போகிறது என்பதை செவிமடுக்க !

ஆம்! அடுத்தடுத்த வார்த்தைகள் எதிர்பார்த்தத்தைப் போலவே அம்மாவின் இதழ்கள் தொட்டுத் தெறித்து வந்து விழுந்தன.

ஆம்! மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள்!.. 

என்னவளை எனக்காகக் கேட்டு அவளது பெற்றோர்களிடம் பேசவிருப்பதாக கூறினார், உள்ளுக்குள் பல எதிர்பார்ப்புகள் நிலைத்திடினும் இயல்பாக எனது தாயாரிடம் உங்களின் விருப்பம் எதுவோ அதன்படி  செய்யுங்கள் என கூறிவிட்டு மறக்காமல் பெண்ணிடமும் பேசி சம்மதம் பெறச் செய்யுங்கள் என்றேன், ஏனென்றால் அவள் மனதில் என்னை மணம் புரியும் ஆசையுமுண்டோ! என நான் அப்போது தீர்மானமாக அறிந்திருக்கவில்லை அல்லவா?. 

அடுத்த சில மணிநேரங்களில் எனது மச்சானிடமிருந்து வரும் தகவலை சுமத்துக்கொண்டு எனது செல்பேசி என் செவிகளில் சிரித்தது .. 

ஆம்!, எதிர்பார்த்தத்தைப் போலவே, “என்னப்பா!, கல்யாணம் முடிவாயிடுச்சா! பொண்ணு வீட்டுல சம்மதிச்சுட்டாங்கலாமே! என பரிகாசமுடன் சொல்லிச் சிரித்தார்.. 

அப்போதுதான் என்னவளுக்குள்ளும் நான் குடியிருந்த முதல் செய்தியறிந்து மனம் மகிழ்  கொண்டது, மணநாள் காண தவமிருந்தது. 

இறையருளால் இருவரும் இணைந்த திருமணம் இனிய முறையில் நிகழந்தேறியபின் நானறியா பல விஷயங்கள் அவள் மொழிய ஆச்சரியத்தில் விரிந்தது எனது விழிகள்.. 

அவளும் திருமணத்திற்கு முன்பு என்னை மிகவும் விரும்பியிருந்திருக்கிறாள் என்பதை அவள் சொல்லக்கேட்டு சுகமானது மனது.. 

தற்போது எங்கெங்கும் வியாபித்திருக்கும் கைபேசி இல்லா பல வருடங்களுக்கு முன்பு நேரடி தொலைபேசி எல்லார் வீடுகளுக்குள்ளும் நுழைந்து அனைவரின் குரல்களை அவர்தம் உறவினர்களுக்கு ஒலிபரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் எனது வீட்டிற்கும் புதிதாக இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. 

அச்சமயத்தில் சிலபோது தொலைபேசி மணி ஒலிக்கும் நான் எடுத்து அதன் ஒருமுனையில் ‘ஹலோ’ சொல்லிவிட்டு காத்திருந்தபின் மறுமுனை ஒலியற்று காற்று வாங்கும் இவ்வாறு ஓரிருமுறை நான் குரல்கொடுத்தும் மறுபக்கம் அமைதிகாத்து சில நிமிடங்களில் துண்டிக்கப்படும். இதுபோன்று ஒருசிலமுறை நடந்த ஞாபகம்..  பின்னர்தான் தெரிந்துகொண்டேன் அது என்னிடம் அவள் விளையாடிய பரிகாச விளையாட்டு அதுவென்று, 

நான் மேற்சொன்ன திருமணத்தில் நான் கண்டபொழுதில் அவளது உள்ளுணர்வும் சொல்லி இருந்திருக்கிறது எனது விருப்பத்தை அவளது இருதயத்தில் அதேபோன்று அவளது வயதொத்த மிக நெருங்கிய உறவின நட்புகளிடமும் என்னைப் பற்றி தமது திருவாய் மலர்ந்திருக்கிறாள். 

எங்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் எங்களது உறவுகளிலேயே மிக நெருக்கமானவர்கள் எனது அம்மா மணப்பெண்ணைப் பற்றி ஏதும் சொல்லாமலேயே மணப்பெண் இவள்தானே? என்று சரியாக கணித்துள்ளனர். அதேபோல் எனது ஒன்றுவிட்ட வயதான பாட்டியாரும் சரியாக மணப்பெண்ணை கணித்து கூறியிருக்கிறார், இதை எனது அன்னை கூறி வியப்பிலாழ்த்தினார். 

அப்போது நான் மேலே சொன்ன அந்த பாடலின் வாக்கியங்கள் நிதர்சனமாக நின்றது, ஆம் இன்னாருக்கு இன்னாரென்று  என்றோ எழுதி விட்டான் இறைவன் அவை காலம் கூடும்போது கனிந்து நிச்சயமான நிகழ்வாகிறது. 

எண்ணமும் எழுத்தும் .. 

பாகை இறையடியான் 

பறம்பு நோக்கி ஒரு பயணம்! | மனம் கவர்ந்த வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரம், அறம், காதல்... வேள்பாரியில் உங்களைக் கவர்ந்த விஷயம்! - உலகுக்கு சொல்லுங்கள் | My Vikatan

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். தமிழ் மக்களின் கருணை, ... மேலும் பார்க்க

தங்க வளையல்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விருப்பம் இல்லாத திருமணம் ஏற்படுத்திய மாற்றம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சின்ன வெங்காயம் - சிறுகதை

காலையில் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்ட குமரன், காலையில் வீட்டிற்கு வந்த செய்தித்தாளை கூட படிக்க நேரமில்லாமல், அதை கூடவே எடுத்துச் சென்றான். அங்கு சென்ற சற்று நேரத்தில், ஒரு முக்கிய வேலைக்காக ச... மேலும் பார்க்க

என் காதல் கண்மணி! - ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க