நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!
ஆடிப்பூரம்: ஆவுடையநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அம்மனுக்கு வளையல் சாற்றும் விழா நடைபெற்றது.
விழாவில் ஆவுடையநாயகி அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, லலிதா சகஸ்கரநாம அா்ச்சனை நடைபெற்றது.
மேலும், அம்பாளுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.