``சாதிதான் நம்முடைய முதல் எதிரி" - ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை குறித்து எம்.பி கமல்...
போர்நிறுத்தத்தை மீறவில்லை! தாய்லாந்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கம்போடியா!
கம்போடியா ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியதாக, தாய்லாந்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில், எல்லைப் பிரச்னைக் காரணமாக, கடந்த வாரம் போர் தொடங்கியது. இருநாட்டுப் படைகளும், எல்லைப் பகுதியில் கடுமையாக மோதிக்கொண்டதில், சுமார் 32 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதாக, நேற்று (ஜூலை 28) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போர்நிறுத்தத்தை மீறி, கம்போடியாவின் ஒழுக்கமற்ற ராணுவ வீரர்கள் சிலர், தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும்; அதற்கு தாங்கள் கொடுத்த பதிலடியின் மூலம் நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெசாயாசய் இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.
இதனை முற்றிலும் மறுத்த கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், நேற்று நள்ளிரவு முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை தாங்கள் முற்றிலும் அமல்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
முன்னதாக, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹேர் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!