செய்திகள் :

Tiger Day: முதுமலையில் 28 சதவிகிதமாக உயர்ந்த புலிகளின் எண்ணிக்கை - துளிர்க்கும் நம்பிக்கை!

post image

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29- ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவசியம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை அடர்த்தி மிகுந்த பகுதியாக இருக்கிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். தமிழ்நாட்டின் முதுமலை & சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பகுதியே வங்கப் புலிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.

முதுமலையில் புலிகள் தினம்

தொடர்ந்து நடைபெற்று வரும் பிரத்யேக புலிகள் கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேட்டை, வாழிட போதாமை, மனித தவறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் தேசிய விலங்கான வங்கப் புலிகளின் எண்ணிக்கை உயர்வு சற்று நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்திருக்கிறது.

இது குறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வனத்துறையின் உயர் அதிகாரிகள் , " 1940 - ம் ஆண்டு இந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் தற்போது ஒரு செழிப்பான புலிகள் காப்பகமாக விளங்குகிறது. நீலகிரி உயிர் கோள காப்பகத்தின் உயிர் நாடியாக இருந்து வரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் 2024-25 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 165 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023- 24- ம் ஆண்டுகளில் புலிகளின் 129 ஆக இருந்தது. தற்போது 165 ஆக உயர்ந்திருக்கிறது. இது 28 சதவிகித உயர்வாகும்.

முதுமலையில் புலிகள் தினம்

வேட்டைத் தடுப்பு காவலர்களின் அர்ப்பணிப்பு முதல் அந்நிய களை தாவரங்களின் அகற்றம் வரை ஒட்டுமொத்த காரணங்களும் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக புலிகள் அடர்த்தி கொண்ட பகுதியாக விளங்கும் முதுமலை, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் வனவிலங்கு பரவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. புலிகள் மட்டுமன்றி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 சிறுத்தைகள், 534 யானைகள், 19 வரிக்கழுதைப் புலிகள், அரியவகை பிணந்தின்னி கழுகுகளின் தாய் மடியாக அரவணைத்து வருகின்றன" என்றனர்.

World Tiger Day: புலியின் உறுமலே காட்டின் மொழி... புலியே மெய்யான வனக்காவலன்! - ஏன் தெரியுமா?

இன்று (ஜூலை 29-ம் தேதி) சர்வதேச புலிகள் தினம். புலிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்தியா, வங்கதேசம், ... மேலும் பார்க்க

தென்காசி: `நாங்க ட்ரக்கிங் போனோமே!' அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 8, 9,10ஆம் வகுப்பு அரச... மேலும் பார்க்க

தாவரங்கள் வலிக்கிறது என்று சொன்னால் பூச்சிகள் விலகிச் செல்லுமா? - ஆச்சர்ய தகவல்

தக்காளிச்செடி ஒன்று நீர்ச்சத்துக்குறைவு பிரச்னையில் இருக்கிறது. இது தெரியாமல், பெண் அந்துப்பூச்சி ஒன்று, அந்தத் தக்காளிச் செடியின் இலை ஒன்றில் தன் மூட்டைகளைஇடும் எண்ணத்துடன் வருகிறது. அப்படிவருகையில்,... மேலும் பார்க்க

Nagam App: வீட்டிற்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க தமிழக அரசின் செயலி; பயன்படுத்துவது எப்படி?

தமிழ்நாடு மாநில வனவிலங்கு ஆணையம், பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் "நாகம்" என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி, மனிதர்களுக்க... மேலும் பார்க்க

கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் கடித்ததில் தம்பதியினர் உயிரிழப்பு - தென்காசியில் சோகம்

தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சீவநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலில் ஐயப்பனை வழிபட்டு விட்டு, அ... மேலும் பார்க்க

Salmon: ஒரு மீனின் பயணத்தில் இத்தனை எதிரிகளா? இது சாலமன்களின் கதை!

உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சாலமனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சாலமன். இது... மேலும் பார்க்க