வரதட்சணை கொடுமை - இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்
கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் கடித்ததில் தம்பதியினர் உயிரிழப்பு - தென்காசியில் சோகம்
தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சீவநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலில் ஐயப்பனை வழிபட்டு விட்டு, அன்னதானத்தில் பங்கேற்றனர். பின் வீட்டிற்கு கிளம்பும் போது அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டு வண்டுகள் கூட்டமாக வந்த பக்தர்களை தாக்கியதில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். வலி தாங்க முடியாமல் துடித்து அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில், லட்சுமணன் அவரது மனைவி மகராசி ஆகியோர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், சாந்தி மற்றும் சண்முக பாரதி ஆகிய மூவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சண்முக பாரதி உடல் நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இன்று காலை தீயணைப்பு படையினர் தென்னை மரத்தில் தண்ணீர் பாய்ச்சி விஷ வண்டுகளை அழித்தனர். விஷ வண்டு கடித்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.