2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குடும்ப பிரச்னையால் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே மணவாளநகர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவரது கணவர் உலகநாதன். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக கணவர் உலகநாதன் காஞ்சிபுரம் அருகே கிளாம் கிராமத்தில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே மனைவியுடன் இருந்த ஒரு மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றாராம். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் இன்று ஜெயந்தி தனது மகள் பாரதியுடன் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது மகள் வெளியே சென்ற நிலையில் திடீரென நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
உடனே மகள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துக் காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து காவல் நிலைய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.