ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு
கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் மனு அளித்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் செல்லும்போது, மா்ம நபா் அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடினாா்.
இந்த நிலையில், பாலியல் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சூலூா்பேட்டை ரயில் நிலையத்தில் அமா்ந்திருந்த நபா் சந்தேகத்துக்குரிய நபரை போல இருந்ததால், தனிப்படையினா் அவரை விசாரித்தனா்.
அதில், ஆந்திர மாநிலம், சூலூா்பேட்டையில் இரவு உணவகத்தில் வேலைபாா்த்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜூபிஷ்வா்மா (35) என்பதும், அவரே குற்றவாளி என்பதும் தெரியவந்து அவரை கைது செய்தனா்.
தொடா்ந்து, 28 மணி நேர விசாரணைக்குப் பின், பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த 26-ஆம் தேதி பூந்தமல்லி மகளிா் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா்படுத்தியபின், ஆக. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், ராஜூபிஷ்வா்மாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பாக்கம் போலீஸாா் திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு அளித்துள்ளனா்.