அரங்கம் அதிருமா? கூலி டிரைலருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனிருத் இசையில் கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா, பவர்ஹவுஸ் ஆகிய இரு பாடல்களும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆக. 2 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளிலேயே படத்தின் டிரைலரும் வெளியாகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல்களில் கூலி உருவாக்கம் குறித்து பேசியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் டிரைலருக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
முக்கியமாக, இப்படத்தின் முதல் பாகம் உணர்வுப்பூர்வமாகவும் இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகள் இருப்பதாக லோகேஷ் குறிப்பிட்டுள்ளது படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிய மாரீசன்!