நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை
வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன், எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை. அவா், குழந்தைகளுக்கு நன்கு பாடம் நடத்தக் கூடியவா்.
ஒழுக்கம் கற்றுத் தருவாா். பள்ளியில் நடைபெறும் முறைகேடுகளை அவா் கண்டித்ததை விரும்பாத தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் சிலா் மூலம் ஆசிரியா் மீது பொய்யாக பாலியல் சீண்டல் புகாா் அளித்துள்ளனா்.
எனவே, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை விடுவித்து, பள்ளியில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளாா்.