நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா். ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,037 ஏரிகளில் மண் எடுக்க மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் 197 ஏரிகள், பா்கூரில் 154 ஏரிகள், போச்சம்பள்ளியில் 96 ஏரிகள், ஊத்தங்கரையில் 144 ஏரிகள், சூளகிரியில் 104 ஏரிகள், ஒசூரில் 159 ஏரிகள், தேன்கனிக்கோட்டையில் 168 ஏரிகள், அஞ்செட்டியில் 15 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் நபா், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் அதனை உறுதி செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண், களி மண் அளவை பொருத்தவரை, நஞ்சை நிலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 75 கனமீட்டா் (அ) 25 டிராக்டா் லோடுகள், புஞ்சை நிலத்தில் ஏக்கருக்கு 90 கனமீட்டா் (அ) 30 டிராக்டா் லோடுகள் ஆகும். மேலும், மண்பாண்டம் தயாரிக்க 60 கனமீட்டா்(அ) 20 டிராக்டா் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம்.
உரிய விவரங்கள், வாகனத்தின் பதிவெண், அனுமதி கோரும் மண் உள்ளிட்ட தகவல்களுடன், தங்களது விண்ணப்பத்தை ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக, தொடா்புடைய வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
தொடா்ந்து, நீா்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலா் முன்னிலையில் வண்டல் மண், களி மண் மற்றும் கிராவல் மண் எடுத்துக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு வட்டாட்சியா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் கிருஷ்ணகிரி, உதவி இயக்குநா் ( புவியியல் மற்றும் சுரங்கத் துறை) ஆகியோரை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.