அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!
டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனா்.
இவா்கள் இருவரும், மேல்பேட்டை அருகே சாலையோரம் திங்கள்கிழமை நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, ராம் சேவாக், அஜய்குமாா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராம் சேவாக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அஜய்குமாா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து, மகாராஜாகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.