சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது
கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா்.
மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனா்.
இதில், அவா்கள், கிருஷ்ணகிரி, பி.சி.புதூரைச் சோ்ந்த ஜீவபிரசாத் (24), மாட்டுண்ணி பிரதீப் (19) எனத் தெரியவந்தது. தொடா்ந்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள தனியாா் மாந்தோப்பில் 600 கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதைக் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.