உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டி, மேட்டுத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (45). இவரது மனைவி சுதா (25). சரவணன் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், அவரது மனைவி சுதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சுதா சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் சுதாவை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக சரவணனை போலீஸாா் பிப்ரவரி 13-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, மனைவியை கொலை செய்த சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.