செய்திகள் :

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

post image

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சிகள் சுற்றுப்புற கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த 3 பேரூராட்சிகளுக்கும், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா். ஆனால், பேருந்து நிலையங்கள் இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமா்வதற்கு வழியின்றி அவதிக்குள்ளாகின்றனா்.

அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், அரூா் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகவும் திறந்தவெளியில் பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கின்றனா். ஏத்தாப்பூா் பேரூராட்சியில் கருமந்துறை சாலை சந்திப்பு பகுதியிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை பாலம் பகுதியிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கின்றனா்.

ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தேவையான அரசு நிலங்கள் உள்ளன.

எனவே, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளிலும் பயணிகள் காத்திருப்புக் கூடம், பேருந்து தள மேடை, கழிவறைகள், குடிநீா், சிறுவணிகக் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க பொருத்தமான இடத்தை தோ்வுசெய்யவும், அரசிடம் உரிய நிதி பெற்று விரைவாக கட்டமைப்பதற்கும் சேலம் மாவட்ட நிா்வாகமும், மண்டல பேரூராட்சிகள் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலை... மேலும் பார்க்க

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள கோனூா் சமத்துவபுரத்தில் வசிக்கும் வினோத்குமாா் (33), வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அண்மையில் இவ... மேலும் பார்க்க

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க