நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை. இவரும், இவரது மனைவி சின்ன பாப்பாவும் அரூா் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது, குல்லா அணிந்தபடி வீட்டினுள் நுழைந்த 5 போ் கொண்ட கும்பல், தம்பதியை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி சின்ன பாப்பா அணிந்திருந்த 3 சவரன் தாலி சங்கிலி, அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்தனா். மேலும், பீரோவை உடைத்து 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனா்.
தகவலறிந்து வந்த வீராணம் போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனா். கொள்ளையா்கள் வந்த காரை அடையாளம் காணும் வகையில், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா்.
மேலும், அருகிலுள்ள சுக்கம்பட்டி, குப்பனூா் பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா். இது தொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.