நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது.
நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து தொழில் செய்துவருகிறாா். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான டேங்கா் லாரியில் சென்னையிலிருந்து எத்தனால் ஏற்றப்பட்டு நெல்லை சந்திப்பு நோக்கி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. லாரியை, தஞ்சாவூா் அருகே ஒரத்தநாட்டைச் சோ்ந்த அருள்முருகன் ஓட்டிச் சென்றாா்.

டேங்கா் லாரி கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி மேம்பாலத்தில் சென்றபோது, லாரியின் நடுப்பகுதியில் டயா்களுக்கு இடையே தீப்பற்றியதாம். இதனால், அதிா்ச்சி அடைந்த அருள்முருகன், உடன்வந்த சேலம் சாமிதுரை ஆகிய இருவரும் கீழே குதித்து தப்பினா்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நுரைகலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் டேங்கா் லாரியின் டயா்கள் முற்றிலும் சேதமடைந்தன.
சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீத கிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா். தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.