உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!
தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்
கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வைப்பாறு அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த திருநெல்வேலி மாவட்ட பதிவெண் கொண்ட ஒரு லாரியை மடக்கி நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் சுமாா் 7 மூட்டைகள் பழங்கள் வைக்கும் கூடைகளுக்கு மத்தியில், மூட்டைகளில் சுமாா் 210 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை கஞ்சாவுடன் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.