போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த மாடசாமி மகன் சண்முகையா (36), அந்தப் பகுதியில் தனிமையில் இருந்த 16 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த 2019 இல் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பீரித்தா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட சண்முகையாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் மேலும் 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி, அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் அமுதா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.