செய்திகள் :

TVK : ``பேரறிஞர் அண்ணா ஸ்டைல்ல மக்களை சந்திப்போம்!'' - நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்தது.

விஜய்
விஜய்

நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது, "இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் நடந்த இரண்டு பெரிய தேர்தல்களான 1967, 1977 போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அதை உறுதியாக நம்புகிறோம். அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிகாரத்தில் அசுரபலமாக இருந்தவர்களை எதிர்த்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள்தான் வென்றிருந்தார்கள்.

எப்படி வென்றார்கள் என்றால் அது சிம்பிள் லாஜிக்தான். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று மக்களை சந்தித்துதான் வென்றிருக்கிறார்கள். 'மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்!' என அண்ணா சொன்னதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

விஜய்
விஜய்

வீதி வீதியாக வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக மக்களை வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டில் இணையுங்கள். அடுத்ததாக மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என நிறைய இருக்கிறது. மக்களோடு மக்களாகத்தான் இருக்கப்போறோம். நாம இருக்குறோம். நம்ம கூட மக்கள் இருக்குறோம். நல்லதே வெல்லும். நல்லதே நடக்கும்" என்றார்.

நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan

முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுக அமைப்புச் செயலாளர் என அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் அன்வர் ர... மேலும் பார்க்க

Gaza: `60,000 உயிரிழப்புகள்' - இஸ்ரேலை எச்சரிக்கும் உலக நாடுகள், இங்கிலாந்து அதிரடி முடிவு!

நேற்று முன்தினம், சில மணிநேர போர் இடைவேளையை அறிவித்தது இஸ்ரேல். இது காசா மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் உதவி பெறுவதற்கான இடைவேளை. இந்த இடைவேளை முடிந்த, ஒரு சில நேரத்திலேயே 43 காசா மக்களைக்... மேலும் பார்க்க

``46 பிரச்னைகள் உள்ளது என்று 4 ஆண்டுகள் கழித்து சொல்வது திறமையான ஆட்சி அல்ல..'' - எடப்பாடி பழனிசாமி

'மக்களை சந்திப்போம், தமிழகத்தை காப்போம்' என்ற பரப்புரை பயணத்தை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பிரமாண்டமான முறையில் வ... மேலும் பார்க்க

``முதல்வருக்கு நோபல் பரிசு, 10 ரூபாய் பாலாஜி, குப்பைக்கு வரி..'' - திமுகவை கடுமையாக விளாசிய இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் , அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணதின் ஒரு பகுதியாக நேற்று சிவகங்கை கழக மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்பொம்மை முதல்வருக்... மேலும் பார்க்க

Bihar SIR: ``சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி" - வழக்கின் விவாதமும், உச்ச நீதிமன்ற உத்தரவும்!

இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், இ... மேலும் பார்க்க

Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?

கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் மற்று... மேலும் பார்க்க