செய்திகள் :

Gaza: `60,000 உயிரிழப்புகள்' - இஸ்ரேலை எச்சரிக்கும் உலக நாடுகள், இங்கிலாந்து அதிரடி முடிவு!

post image

நேற்று முன்தினம், சில மணிநேர போர் இடைவேளையை அறிவித்தது இஸ்ரேல். இது காசா மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் உதவி பெறுவதற்கான இடைவேளை.

இந்த இடைவேளை முடிந்த, ஒரு சில நேரத்திலேயே 43 காசா மக்களைக் கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். இதில் 9 பேர் உணவு மற்றும் உதவிக்காக காத்திருந்தவர்கள் ஆவார்கள்.

60,000 உயிரிழப்புகள்

காசா
காசா

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் போரில், இதுவரை 60,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.

இந்த உயிரிழப்புகள் போரினால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. இதில் பலரும் உணவு இல்லாமலும், உதவி கிடைக்காமலும் இறந்தவர்களும் அடங்குவார்கள். இப்படி உணவு கிடைக்காமல், பாலஸ்தீனத்தில் 88 குழந்தைகள் உணவு இல்லாமல், பசியால் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஏன் இந்தப் பசிக்கொடுமை?

2022-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்தப் போரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு நாடுகளும் மாறி மாறி போர் மற்றும் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது.

பாலஸ்தீனம் பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் ஒரு கொடூரமான தந்திரத்தைச் செயல்படுத்தி வருகிறது.

அதாவது, பிற நாடுகளில் இருந்து பாலஸ்தீனத்திற்கு வரும் உதவியை, மக்களுக்கு செல்ல முடியாமல் தடுப்பது ஆகும்.

காசா, பாலஸ்தீனம்
காசா, பாலஸ்தீனம்

அப்படி மீறி செல்லும் உதவிகள், அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பிரியும்போது, அனைவருக்கும் போதுமான உணவு கிடைத்துவிடுவதில்லை.

இதனால், பாலஸ்தீன மக்கள் பசியாலும், ஊட்டச்சத்து குறைப்பாடாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலர், பசியால் இறந்தும் போகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க, சில மக்கள் தங்களது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிவிட்டனர், சென்று வருகின்றனர்.

ஐ.நாவின் எச்சரிக்கை

பாலஸ்தீனத்திற்கு உதவிக்காக செல்லும் ட்ரக்குகளின் எண்ணிக்கை வெறும் 73. இது நிச்சயம் லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்களுக்கு போதாது.

பாலஸ்தீனத்தில் இருக்கும் 20 லட்ச மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல நாள்களுக்கு உணவு இல்லாமல் இருந்து வருகின்றனர். அதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாழ்வதுப்போல இருந்து வருகிறார்கள்.

ஐ.நா
ஐ.நா

உணவு குறைப்பாடு நிலை தொடர்ந்தால், அங்கே பசி பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து தான் வருகிறது. ஆனாலும், இஸ்ரேல் இறங்கி வந்தப்பாடில்லை.

இஸ்ரேல் மறுப்பு

அத்தனை அறிக்கைகள், வீடியோக்கள், புகைப்படங்கள் பாலஸ்தீன் மக்களின் பசியைக் காட்டினாலும், இதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று கூறி வருகிறது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

ஆனால், அவரது உற்ற நண்பர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

பிரான்ஸ், சவுதி அரேபியா, இங்கிலாந்து...

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரப் பிடியை தளர்த்த சில நாடுகள் புதிய அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

அதன் படி, பிரான்ஸ், சவுதி அரேபியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த வரிசையில், நேற்று முதல் இங்கிலாந்தும் இணைந்துள்ளது.

இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை என்றால், வரும் செப்டம்பர் மாதம் முதல் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக இங்கிலாந்தின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க பாலஸ்தீன மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி நிறைந்த புகைப்படங்கள் பேசுப்பொருளாகிறது.

இதனால், அனைத்து நாடுகளும், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன.

இதற்கு இஸ்ரேல் பணியுமா, பணியாதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பால், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது. பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்... மேலும் பார்க்க

நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan

முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுக அமைப்புச் செயலாளர் என அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் அன்வர் ர... மேலும் பார்க்க

TVK : ``பேரறிஞர் அண்ணா ஸ்டைல்ல மக்களை சந்திப்போம்!'' - நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்தது.விஜய்நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்... மேலும் பார்க்க

``46 பிரச்னைகள் உள்ளது என்று 4 ஆண்டுகள் கழித்து சொல்வது திறமையான ஆட்சி அல்ல..'' - எடப்பாடி பழனிசாமி

'மக்களை சந்திப்போம், தமிழகத்தை காப்போம்' என்ற பரப்புரை பயணத்தை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பிரமாண்டமான முறையில் வ... மேலும் பார்க்க

``முதல்வருக்கு நோபல் பரிசு, 10 ரூபாய் பாலாஜி, குப்பைக்கு வரி..'' - திமுகவை கடுமையாக விளாசிய இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் , அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணதின் ஒரு பகுதியாக நேற்று சிவகங்கை கழக மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்பொம்மை முதல்வருக்... மேலும் பார்க்க

Bihar SIR: ``சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி" - வழக்கின் விவாதமும், உச்ச நீதிமன்ற உத்தரவும்!

இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், இ... மேலும் பார்க்க