மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
ரசிகர்களுக்கு விருந்தா? கூலி கால அளவு அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டைக் காட்சிகள் இருப்பதால், படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இறுதியாக இயக்கிய லியோ திரைப்படம் 2.44 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்பு - 49 புரமோ?