சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.
வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாா். திங்கள்கிழமை வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதி மக்கள் சென்று சடலத்தை மீட்டனா். அவா், காணாமல் போன மாரியம்மாள் என்பது தெரிய வந்தது.
பின்னா், சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி தற்கொலை: முக்காணி உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு ராகவன் மகன் காசிராஜன் (32). கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவா். கடந்த 27ஆம் தேதி ராமச்சந்திரபுரம் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றாா். பின்னா் தற்கொலை செய்யப்போவதாக மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து காசிராஜனின் தந்தை ராகவன் உள்ளிட்டோா் ராமச்சந்திரபுரம் காட்டுக்கு சென்று பாா்த்தனா். அப் போது புளியமரத்தில் காசிராஜன்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.